எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்த உக்ரைன்., ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்த மூன்று உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரேனிய ட்ரோன்கள்- வீழ்த்திய ரஷ்ய படை
ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் எதிர் தாக்குதலைத் தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு எல்லைப் பகுதியான பிரையன்ஸ்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்த மூன்று ட்ரோன்களை அழித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள Druzhba எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரேனிய ஆயுதப் படைகள் இரவில் நடத்திய தாக்குதலை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாக பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறினார். அங்கு வேறு எந்த சேதத்தையும் அவர் குறிப்பிடவில்லை.
Representatative Image Credit: Global Information Dominance Experiment 3rd iteration
அதிகரிக்கும் ட்ரோன் தாக்குதல்
சமீபத்திய மாதங்களில் ட்ரோன் தாக்குதல்கள் பெருகிவிட்டன. இந்த வாரத்தில் மட்டும் பல முறை ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததாக இருதரப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய மண்ணில் துருப்புக்களுக்கு எண்ணெய் வசதிகள் மிகவும் அவசியமானவை என்பதை புரிந்துகொண்ட உக்ரைன் அதன் ட்ரோன் தாக்குதல்களின் முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது.
Krasnodar Region Governor Telegram Channel
உக்ரைன் எதிர்த்தாக்குதல்
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தை திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் மீண்டும் மீண்டும் கூறிவருவம் நிலையில், அப்பகுதியையும் உக்ரைன் தொடர்ந்து குறிவைத்துவருகிறது.
ரஷ்யப் படைகள் கிரிமியாவில் ஒன்பது ட்ரோன்களை வீழ்த்தியதாக அங்கு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் செர்ஜி அக்ஸியோனோவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
photo: REUTERS/Vasily Fedosenko
கடந்த வாரம், ரஷ்யாவின் தெற்கு நகரமான Voronezh நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை ஆளில்லா விமானம் தாக்கி இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.