மேற்கத்திய நாடுகள் அனுப்பிய ஆயுதங்களை அழித்த ரஷ்யா! உக்ரைன் மறுப்பு
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அனால், உக்ரைன் தரப்பிலிருந்து அது மறுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கு நகரமான Sievierodonetsk-ல் சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு உக்ரைனின் டெர்னோபில் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயுதங்கள் அடங்கிய பெரிய களஞ்சியசாலையை ரஷ்யா அதன் கப்பல் ஏவுகணைகல் கொண்டு தாக்குதல் நடத்தி அழித்ததாக கூறியுள்ளது.
ஆனால், அதனை மறுக்கும் வகையில், கருங்கடலில் இருந்து Chortkiv நகரின் மீது ஏவப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக டெர்னோபில் பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார்.
மேலும், அங்கு ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணை மிதித்து கொன்ற காட்டு யானை., இறுதிச் சடங்கின்போது மீண்டும் சடலத்தை தாக்கியதால் பரபரப்பு!
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை ரஷ்யா பலமுறை கண்டித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாத தொடக்கத்தில், உயர் துல்லியமான மொபைல் ரொக்கெட் அமைப்புகளில் பயன்படுத்த உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை மேற்கு நாடுகள் வழங்கினால், ரஷ்யா புதிய இலக்குகளைத் தாக்கும் என்று கூறினார்.
ரஷ்யப் படைகள் நாட்டின் கிழக்குப் பகுதியை பீரங்கிகளுடன் தாக்குவதால், கனரக ஆயுதங்களை விரைவாக அனுப்புமாறு உக்ரேனியத் தலைவர்கள் சமீபத்திய நாட்களில் மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உக்ரைன் தலைநகரை கோட்டை விட்ட ரஷ்யா! தற்போது போட்ட மாஸ்டர் ப்ளான்... குவிக்கப்பட்ட துருப்புகள்
லூஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களால் உருவாக்கப்பட்ட கிழக்கில் தொழில்மயமான டான்பாஸ் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டிற்கான போரின் மையமாக சீவிரோடோனெட்ஸ்க் மாறியுள்ளது. பிப்ரவரி 24 அன்று ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து நகரின் சில பகுதிகள் தூள் தூளாகியுள்ளன.
லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி கெய்டாய் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகள் சீவிரோடோனெட்ஸ்கில் தெரு தெருவாக சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.
ரஷ்யப் படைகள் நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய நிலையில், உக்ரேனிய துருப்புக்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்குமிடமாக இருக்கும் ஒரு தொழிற்துறை மற்றும் இரசாயன ஆலையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
30 மில்லியன் டன்... உக்ரைன் தானிய ஏற்றுமதி மீண்டும் கடும் சிக்கலில்