உக்ரேனிய ட்ரோனை சுட்டுவீழ்த்தியபோது விபரீதம்! ரஷ்ய அணுமின் நிலையத்தில் தீ..என்ன நடந்தது?
ரஷ்யாவின் குர்ஸ்க் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் சாதனம் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பலமுறை எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, அணுமின் நிலையங்களைச் சுற்றி சண்டையிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சர்வதேச அணுசக்தி நிறுவனம் பலமுறை எச்சரித்தது.
இந்த நிலையில், மேற்கு ரஷ்யாவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யப்படை அதனை சுட்டு வீழ்த்தியது.
அப்போது குர்ஸ்க் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் சாதனம் வெடித்தது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
உயிரிழப்பு இல்லை
எனினும் உடனடியாக தீயணைப்புப் படையினரால் அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திறன் குறைக்கப்பட்ட இடத்தில் ட்ரோன் நொறுங்கியதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அணுமின் நிலையம் இதுகுறித்து தெரிவிக்கையில், "குர்ஸ்க் அணுமின் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழில்துறை தளத்தில் கதிர்வீச்சு பின்னணி மாறவில்லை. மேலும் இயற்கையான நிலைக்கு ஒத்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.
இந்த அணுமின் நிலைமையமானது ரஷ்ய-உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ளது. சுமார் 440,000 மக்கட்தொகை கொண்ட குர்ஸ்க் நகரின் மேற்கில் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |