கருங்கடலில் உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: கேள்விக்குறியாகும் போர் நிறுத்தம்?
கருங்கடல் பகுதியில் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்கள்
உக்ரைன் - ரஷ்யா இடையே தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட சில மணி நேரங்களில், கருங்கடல் பகுதியில் ஒன்பது உக்ரேனிய ஆளில்லா ட்ரோன் விமானங்களை (drone) தங்கள் படைகள் இடைமறித்து அழித்ததாக மாஸ்கோ அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் இரண்டு விமானங்கள் கருங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) வெளியிட்ட தகவலின்படி, பெல்கோரோட் (Belgorod) பகுதியில் ஐந்து ஆளில்லா விமானங்களும், குர்ஸ்க் (Kursk) பகுதியில் இரண்டு விமானங்களும், கருங்கடல் பகுதியில் இரண்டு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
கருங்கடல் பகுதியில் உள்ள ஆளில்லா விமானங்கள் கடல் இலக்குகளை குறிவைத்தனவா அல்லது அப்பகுதியை கடந்து சென்றனவா என்பது குறித்து அமைச்சகம் தெளிவான தகவல் எதையும் வெளியிடவில்லை.
இந்த ஆளில்லா ட்ரோன் விமான ஊடுருவல் குறித்து உக்ரைன் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
கேள்விக்குறியாகும் போர் நிறுத்த உடன்பாடு?
அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா மற்றும் உக்ரைனிய பிரதிநிதிகளை சவுதி அரேபியாவின் ரியாத்தில் தனித்தனியாக சந்தித்ததை தொடர்ந்து, கருங்கடல் பிராந்தியத்தையும், எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்துவதையும் உள்ளடக்கிய போர் நிறுத்த உடன்பாடு செவ்வாய்க்கிழமை எட்டப்பட்டது.
இந்நிலையில் உக்ரைனிய ட்ரோன்கள் கருங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பது புதிதாக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |