அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில்.,உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
சனிக்கிழமை காலை உக்ரைனின் சப்போரிஜியா(Zaporizhzhia) பகுதி மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் அப்பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுமையாக சேதமடைந்து இருப்பதாக அப்பகுதியின் பிராந்திய அதிகாரி இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் இந்த தாக்குதலில் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் இந்த மோதலுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்காக உக்ரைனிய குழுவினர் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் இன்று பிற்பகல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு நடைபெற இருப்பதாக உக்ரைனிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |