போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்?
ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு தற்போது அதிக ஆர்வம் காட்டி வருவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்து இருப்பது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
போர் நிறுத்தத்தை விரும்பும் ரஷ்யா
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புதன்கிழமை வெளியிட்ட தகவலில், ரஷ்யா தற்போது போர் நிறுத்தத்திற்கு அதிக ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் முக்கியமானவை என்றும், அமெரிக்காவும், உக்ரைனும் ரஷ்யாவிடம் ஏமாந்து விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
Right on my way from our brigades here in Sumy region, I spoke with President Trump. This conversation happened after President Trump's representative, Steve Witkoff, visited Moscow.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 6, 2025
Our joint position with our partners is absolutely clear – the war must end. And it must be done… pic.twitter.com/NOxZPAdSr2
ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃபின் சந்திப்புக்கு பிறகு, பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பிறகு உக்ரைனிய ஜனாதிபதியின் இந்த கூற்று வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜெலென்ஸ்கியின் X தளப்பதிவு
“நமக்கு நீடித்த நம்பகமான அமைதி தேவை, அதே நேரம் உக்ரைன் அதன் சுதந்திரத்தை நிச்சயம் பாதுகாக்கும், ரஷ்யா தொடங்கிய போரை தானே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தனது X தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
US Envoy Witkoff Meets Putin in the Kremlin
— Bloomberg TV (@BloombergTV) August 6, 2025
President Donald Trump's special envoy, Steve Witkoff, met with Russian President Vladimir Putin in the Kremlin for almost three hours on Wednesday https://t.co/xRtwXml1Xd pic.twitter.com/NPTiaK7byC
மேலும், ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுப்பது பலனளிக்கிறது என்றாலும், பேச்சுவார்த்தையின் விவரங்களின் அமெரிக்காவும், உக்ரைனும் ரஷ்யாவிடம் ஏமாந்து விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைனிய அதன் கூட்டணி நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை முடிவெடுக்க விரைவில் கூடுவார்கள் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |