ஜேர்மனிக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா., இரு நாடுகளின் உறவுகள் மேலும் விரிசல்
ரஷ்யா, ஜேர்மனியின் ARD ஒளிபரப்பு நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அவர்களை வெளியேற்றுகிறது.
இது, ஜேர்மனியின் நடவடிக்கையை எதிர்த்து எடுக்கப்பட்ட பதிலடி நடவடிக்கையாக ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் இதுகுறித்த ஒரு விளக்கக் கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, ரஷ்யாவின் Channel One நிருபர்களுக்கு அனுமதி அளித்தால், ARD நிறுவனத்தின் மற்ற ஊழியர்களுக்கு அங்கீகாரம் வழங்க முடியும் எனக் கூறினார்.
ஜேர்மனியின் வெளியுறவுத்துறை, Channel One குறித்த குற்றசாட்டுகளை மறுத்துள்ளது. இருப்பிட அனுமதி தொடர்பான பிரச்சினைகளே இதில் காரணமாக இருக்கலாம் எனக் கூறிய அவர்கள், அவை மாநில அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
Channel One மற்றும் Ruptly போன்ற ரஷ்ய ஊடகங்கள் மீது ஜேர்மனி, European Union தடை விதிப்பின் பின்னணியில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, உக்ரைன் போரினால் ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகள் தீவிரமாக மோதும் சூழலில் நடந்துள்ளது.
ARD நிருபர்கள் வெளியேற்றப்பட்டதை ஜேர்மனியின் வெளியுறவுத்துறை "ஏற்க முடியாதது" எனக் கண்டித்துள்ளது.
WDR நிர்வாகம், "மாஸ்கோவில் இருந்து செய்திகளை வழங்குவதில் மிகுந்த தடை மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறோம்" எனத் தெரிவித்தது.
இந்த சூழல், ரஷ்யா-ஜேர்மனி ஊடக உறவுகளை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russian Federation, Russia Ukraine war, Russia Germany War, Russia vs Germany