பிரான்ஸை பழிக்கு பழி தீர்த்த ரஷ்யா: ராஜதந்திரிகளை வெளியேற்றி அதிரடி!
ரஷ்யாவில் இருந்து மொத்தம் 35 பிரான்ஸ் ராஜதந்திர அதிகாரிகளை வெளியேற்றி இருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இதுவரை மொத்தம் 300க்கும் மேற்பட்ட ரஷ்ய ராஜதந்திரிகளை ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாடுகளில் இருந்து அதிரடியாக வெளியேற்றியது.
இவற்றில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் மட்டும் கிட்டத்தட்ட 34 ரஷ்ய ராஜதந்திரிகளை தங்களது நாட்டில் இருந்து வெளியேற்றியது.
மேலும் பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவதாக அந்த நாட்டின் உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் கூடுதாக 6 ராஜதந்திரிகளை பிரான்ஸ் வெளியேற்றியது.
கூடுதல் செய்திகளுக்கு: மரியுபோல் வீரர்கள் நாட்டின் ஹீரோக்கள்...பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி அறிவிப்பு
இந்தநிலையில், இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, 35 பிரான்ஸ் ராஜதந்திர அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.