மரியுபோல் வீரர்கள் நாட்டின் ஹீரோக்கள்...பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி அறிவிப்பு
அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் மாதக் கணக்கில் பதுங்கி இருந்த உக்ரைனிய வீரர்களை அமெரிக்கா ஹீரோக்கள் என பாராட்டியுள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரை முழுவதுமாக ரஷ்ய படைகளின் பிடிகளில் சிக்க வீடாமல் கடந்த மார்ச் மாதம் முதல் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருந்து பாதுகாத்து வந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆலையில் இருந்து வெளியேறி ரஷ்ய படைகளிடம் சரணடைந்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை படுகாயமடைந்த 264 உக்ரைனிய வீரர்கள் பேருந்து வாயிலாக வெளியேறிய நிலையில், மீதமுள்ள உக்ரைனிய வீரர்களும் செவ்வாய் கிழமையான நேற்று வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் உக்ரைனின் இரும்பு ஆலையில் இத்தனை காலங்களாக தாக்குபிடித்து வந்த உக்ரைனிய ராணுவ வீரர்களை ஹீரோக்கள் என அமெரிக்க பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாலியல் வழக்கில் எம்.பி கைது....இது நமது அரசியல் கலாச்சாரத்தின் பிரச்சனை: லிஸ் டிரஸ் கருத்து!
அத்துடன் ஆலையில் இத்தனை காலங்கள் தைரியமாகவும், திறமையாகவும் காத்து வந்ததை சிந்தித்தால் அவை பாராட்டுக்குரியது, மேலும் இவர்களை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஹீரோக்கள் என அழைத்ததை நாங்கள் அனைவரும் ஏற்றுகொள்வோம் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.