உக்ரைன் மீது 60 வடகொரிய ஏவுகணைகளை வீசிய ரஷ்யா - ராணுவ தகவல்
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள யுத்தத்தில், வடகொரியாவால் வழங்கப்பட்ட ஏவுகணைகளில் குறைந்தபட்சம் 60 ஏவுகணைகளை ரஷ்யா செலுத்தியுள்ளது.
இந்த தகவலை உக்ரைனிய ராணுவம் ரேடியோ ஃப்ரீ யூரோப்/ரேடியோ லிபர்டியில் உறுதிப்படுத்தியது.
இப்போரில் ரஷ்யாவிற்கு வடகொரியா துவக்கத்திலிருந்து வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களை வழங்கி மிகப்பாரிய ஆதரவை வழங்கிவருகிறது.
2023 ஜூன் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்த ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த கால அறிக்கைகள் 50 லட்சம் artillery shell குண்டுகள் மற்றும் 100 குறைந்த short-range ballistic ஏவுகணைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் தொழில்நுட்பம் பழமையானது என்பதால், குண்டுகளின் துல்லியம் குறைவாகவே உள்ளது என்று உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து, ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைனிய ராணுவத்தை எதிர்த்து போராடியுள்ளனர். சுமார் 800 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மீட்கும் முயற்சியில், இந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த உதவிக்குப் பதிலாக, வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்திற்கு தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை ரஷ்யாவிடமிருந்து பெறுவதாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |