உக்ரைன் மீது 36 ஏவுகணைகளை சரமாரியாக தாக்கிய ரஷ்யா
உக்ரைனை குறிவைத்து ரஷ்யா இன்று (விழக்கிழமை) 36 ஏவுகணைகளை சரமாரியாக தாக்கியது. அதில் உக்ரைனின் வான் பாதுகாப்பு பேட்டரிகள் 16 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தின.
இந்த ஏவுகணை தாக்குதலில், 79 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் அதிகாரத்தின்படி, ரஷ்யாவின் ஏவுகணைகள் நாட்டின் கிழக்கிலிருந்து மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இலக்குகளை தாக்குகின்றன.
அறிக்கைகளின்படி, ஏழு வீடுகள் அழிக்கப்பட்டன, மேலும் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் தொழிற்சாலை ஆலையில் தீப்பிடித்ததால் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டு சில மணிநேரங்களில் அணைக்கப்பட்டன.
AP Photo/Evgeniy Maloletka
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து உக்ரேனியப் படைகள் பின்வாங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
உக்ரேனிய துருப்புக்கள் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட கோடுகளிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தோராயமாக பின்வாங்கின.
இதற்கிடையில், ரஷ்ய படைகள் அரசாங்க நிலைகள் மீது 24 மணி நேரமும் தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மல்யார் கூறியுள்ளார்.
மறுபுறம், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிக இராணுவ உபகாரங்களா மற்றும் ஆயுதங்களை அறிவித்துள்ளன.