உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்திய பயங்கர ஆயுதம்: பாதுகாப்பு அமைச்சகம் பகீர் தகவல்!
உக்ரைன் மீதான போரில் மிகவும் ஆபத்தான ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக நேற்று பயன்படுத்தி இருப்பதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றமானது உலக நாடுகளை மூன்றாம் உலக போருக்கு நிர்பந்திக்கலாம் என அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவின் இந்த போர் தாக்குதலானது போர் குற்றமாக கருதப்பட்டு, ஜனாதிபதி புதினை போர் குற்றவாளியாக அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகள் அறிவித்தது.
இந்தநிலையில் உக்ரைனின் இவானோ-பிரான்கோவ்ஸ்க் பகுதியில் நிலத்திற்கு அடியில் நிறுவப்பட்டுள்ள உக்ரேனிய ஏவுகணை கிடங்கை நேற்று ரஷ்யாவின் பயங்கரமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் இதுவே உக்ரைனை தாக்கும் ரஷ்யாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரால் உணவு பஞ்சம் அதிகரிக்கும்: ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!