உக்ரைன் போரால் உணவு பஞ்சம் அதிகரிக்கும்: ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை!
உக்ரைன் மீதான ரஷ்ய போரால் எழுந்துள்ள உணவு பஞ்சம் மற்றும் உணவு சங்கலி ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்புகளை சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் ராணுவ தாக்குதலால் உலக அளவிலான பொருளாதார நிலைத்தன்மையில் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணமாக உலகின் முக்கிய உணவு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவின் மீது மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளே காரணமாக பார்க்கப்படுகிறது.
The war in Ukraine is already disrupting supply chains and causing the prices of fuel, food and transport to skyrocket.
— António Guterres (@antonioguterres) March 19, 2022
We must do everything possible to avert a hurricane of hunger and a meltdown of the global food system.
மேலும் கோதுமை உற்பத்தியில் முதன்மை நாடான உக்ரைனும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அதன் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், உக்ரைன்-ரஷ்யா போரால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவு, கச்சா எண்ணெய், மற்றும் போக்குவரத்துக்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய உணவு பஞ்சம் மற்றும் உணவு சங்கலியின் நிலைத்தன்மையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை விரைவில் சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அவலங்களை விளக்கும் புதிய செயற்கைகோள் புகைப்படம்: அத்துமீறிய ரஷ்ய ராணுவம்!