உக்ரைன் படைகள் மீது குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானம்! வீடியோ ஆதாரம்
உக்ரைன் படைகள் இருக்கும் பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பெழிந்த சென்ற காணொளி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 68வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டு கார்கிவ் நகரம் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, உக்ரைனின் கிழக்கில் உள்ள Popasnaya நகரில் ரஷ்யாவின் SU-25 ரக போர் விமானம் குண்டு மழை பொழிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Popasnaya நகரில் உக்ரைன் ஆயுத படைகள் இருக்கும் பகுதியில் ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்ய படகுகளை தவிடுபொடியாக்கிய உக்ரைன் ட்ரோன்! வீடியோ ஆதாரம்
Popasnaya நகரில் ரஷ்ய விமானம் குண்டு பொழிந்து செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
Su-25 VKS after striking on the positions of the Armed Forces of Ukraine in Popasnaya. pic.twitter.com/KW6SeeVomZ
— ТРУХА⚡️English (@TpyxaNews) May 2, 2022