உக்ரைனியர்களை கடத்தி செல்லும் ரஷ்யா: பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு தகவல்!
செய்தி சுருக்கம்:
- கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் ரஷ்யாவிற்கு கடத்தி இருகிறார்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல்
-
கடத்தப்பட்ட நபர்களில் 1,74,689 பேர் குழந்தைகள் என அறிவிப்பு
ரஷ்ய அத்துமீறல்கள் உக்ரைனில் தொடங்கிய நாள் முதல் இதுவரை கிட்டத்தட்ட 1மில்லியன் உக்ரைனியர்கள் ரஷ்யாவிற்கு கடத்தபட்டு இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்ய இடையேலான போர் 60வது நாள்களை கடந்து தீவிர கட்டத்தை அடைந்து இருக்கும் இந்த சூழ்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டான்பாஸில் ரஷ்ய இராணுவம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கையால் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நகரங்களில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது 1 மில்லியன் உக்ரைனிய மக்களை ரஷ்ய இராணுவம் அவர்களது நாட்டிற்கு வலுக்கட்டாயமாக கடத்தி சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் தனது கட்டுபாட்டுக்குள் வந்த பகுதிகளில் இருந்து உக்ரைனியர்களை மிரட்டி ரஷ்ய போர் விமானங்களில் ரஷ்யாவிற்கு கடத்தி செல்வதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்தநிலையில், உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் உக்ரைனில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 9,51,000 உக்ரைனியர்களை மிரட்டி வலுக்கட்டயமாக ரஷ்யாவிற்கு கடத்தி சென்று இருப்பதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு!
மேலும் இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ள 9,51,000 நபர்களில் 1,74,689 பேர் குழந்தைகள் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்திக்கான வளம்: ட்விட்டர் The Kyiv Independent