ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விடயத்தில் கடுமையான அதிர்ச்சியை அளித்தது ரஷ்யா!
எரிவாயு வழங்கலை மீண்டும் துவங்காமல் கிடப்பில் போட்டுவிட்டது ரஷ்யா.
இதனால் ஐரோப்பிய மக்கள் குளிரால் வாடும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
எரிவாயு வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்தன. அதைத் தொடர்ந்து ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom எரிவாயு வழங்கலின் அளவைக் குறைக்கத் துவங்கியது.
குழாய் மூலம் எரிவாயு அனுப்பும் இயந்திரத்தில் கோளாறு என்று கூறி எரிவாயுவின் அளவைக் குறைத்த Gazprom நிறுவனம், பின்னர் பராமரிப்புப் பணிகள் நடப்பதாகக் கூறி எரிவாயு விநியோகத்தை முற்றிலும் நிறுத்தியது.
image-news.sky
இந்நிலையில், தற்போது எரிவாயு விநியோகிக்கும் இயந்திரத்தின் ஒரு பாகத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, குழாய் மூலம் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டது அந்நிறுவனம்.
ஆனால், அந்தக் கசிவால் அந்த இயந்திரத்தின் இயக்கம் பாதிக்கப்படாது என அந்த இயந்திரத்தைப் பழுதுபார்க்கும் Siemens Energy நிறுவனம் கூறியுள்ளது.
ஆக, மீண்டும் ஏதேதோ காரணங்கள் கூறி எரிவாயு வழங்கலை முற்றிலும் நிறுத்தியுள்ளது ரஷ்யா.
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என்றால், குளிரால் ஐரோப்பிய மக்கள் கடும் அவதியுற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
image-news.sky