ஆறு இராணுவ ஜெனரல்கள் நீக்கம்...தவறான தகவல்களை ரஷ்யா பரப்புகிறது: பிரித்தானிய உளவுத்துறை குற்றச்சாட்டு
ரஷ்யா வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகிறது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு.
பொதுமக்களின் உயிரிழப்பை குறைக்கவே போர் தாக்குதல் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் தனது இராணுவப் பிரச்சாரத்தின் வேகத்தை குறைப்பதாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, தவறான தகவல்களை வேண்டுமென்றே ரஷ்யா பரப்புவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகளின் மோசமான செயல்திட்டம் மற்றும் உக்ரைனின் வலுவான எதிர்ப்பு ஆகியவற்றால் நகரங்களை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 26 August 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) August 26, 2022
Find out more about the UK government's response: https://t.co/InVVkio2XL
?? #StandWithUkraine ?? pic.twitter.com/OvxTQAfC32
இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோர் குறைந்தது ஆறு இராணுவ ஜெனரல்களை நீக்கியுள்ளனர்.
இந்தநிலையில் உக்ரைனில் பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தால் ரஷ்யா வேண்டுமென்றே உக்ரைனில் தனது இராணுவ பிரச்சாரத்தின் வேகத்தை மெதுவாக்குகிறது என 24 ஆகஸ்ட் 2022 அன்று, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிடம் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை வெளியிட்ட தினசரி அறிக்கையில், ரஷ்ய படைகளின் தவறான நகர்வு, மற்றும் உக்ரைனிய படைகளின் வலுவான எதிர்ப்பு போன்ற காரணங்களால் தான் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
GETTY
கூடுதல் செய்திகளுக்கு: லொட்டரியில் பெருந்தொகை கிடைத்ததும் காதலனைக் கழற்றி விட்ட பிரித்தானியப் பெண்...
மேலும் ரஷ்ய படைகளின் முன்னேற்றம் குறித்து வேண்டுமென்றே ரஷ்யா தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு பேசிக்கொண்டிருந்த நாளில், ரஷ்ய எஸ்எஸ்-26 இஸ்கந்தர் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையால் சாப்லைன் நகரின் ரயிலில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.