யாரை கொல்ல வேண்டும்? பட்டியல் தயாரித்துள்ள ரஷ்யா- வெளியான எச்சரிக்கை தகவல்
படையெடுப்பின் போது யாரைக் கொல்ல வேண்டும், யாரை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியல் தயாரித்து வைத்துள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பேசெலட்டுக்கு, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நெல் க்ராக்கர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உக்ரைன் மீதான படையெடுப்பின் போது அந்த நாட்டில் உள்ள யாரையெல்லாம் கைது செய்ய வேண்டும், யாரையெல்லாம் வதை முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியலிட்டு வைத்துள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் சாதாரண மக்கள் அமைதி வழியில் நடத்தும் போராட்டங்களை கலைக்கவும் மிகக் கொடூரமான வழிகளை ரஷ்யா திட்டமிட்டு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் மக்கள் கடத்தப்படலாம், அரசியல் விரோதிகள் சிறைபிடிக்கப்படலாம் மற்றும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதானகும் எனவும் கவலை தெரிவித்துள்ளது.