மூன்றில் ஒருபங்கு ரஷ்ய ராணுவம் தற்போது இல்லை: பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
உக்ரைன் போரில் ரஷ்யா தனது மூன்றில் ஒருபங்கு தரைப்படையை இழந்து இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட 81 நாட்களை கடந்து இருக்கும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கப்பட்டு தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளான டான்பாஸில் ரஷ்ய படைகள் முழுகவனம் செலுத்து வருகின்றன.
இந்தநிலையில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள உளவுத்துறை தகவலில், உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகள் இதுவரை பயன்படுத்திய தரைவழி ராணுவப் படையில் மூன்றில் ஒருபங்கு என்ற எண்ணிக்கையை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 15 May 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) May 15, 2022
Find out more about the UK government's response: https://t.co/VBPIqyrgA5
?? #StandWithUkraine ?? pic.twitter.com/n6dBVZHAos
கடந்த ஒருமாதங்களாகவே ரஷ்யா குறிப்பிடத்தக்க பிராந்திய ஆதாயங்கள் எதையும் கைப்பற்றாத நிலையில், அடுத்துவரும் 30 நாள்களில் ரஷ்யா வியக்கத்தகு எத்தகைய தீவிர ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து, தற்போதைய ரஷ்யப் படைகளின் முக்கிய தாக்குதல் புள்ளியான டான்பாஸிலும், அதன் தாக்குதல் வேகத்தை ரஷ்யப் படைகள் இழந்துடன், வெற்றிக்காக நிர்ணயித்த கால அளவில் இருந்தும் பின்தங்கியிள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியாரிடம் திட்டவட்டமாக தெரிவித்த இளவரசர் ஹரி- மேகன் தம்பதி: வெளியான தகவல்
அந்தவகையில், உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்-வில் ரஷ்ய படைகள் தோல்வியடைந்தாக உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் நிபுணர்கள் குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.