உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவில் நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல்

Vladimir Putin Russian Federation Election
By Ragavan Sep 18, 2026 04:06 PM GMT
Report

Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்

2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேர்தலில், சுமார் 111 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.

Russia-Holds-First-Election-Since-Ukraine-War

இந்த தேர்தல் மூலம் 450 இடங்களைக் கொண்ட ஸ்டேட் டூமா (State Duma) எனப்படும் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் பாதி இடங்கள் கட்சிப் பட்டியல் மூலம், மற்ற பாதி தனிப்பட்ட தொகுதிகள் மூலம் நிரப்பப்படுகின்றன.

வாக்குப்பதிவு முறைமைகள் பாரம்பரிய வாக்குச்சாவடிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும். யுனைடெட் ரஷ்யா கட்சி (United Russia Party) பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு

நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு

போருக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்த யாப்லோகோ கட்சி (Yabloko Party) கட்சிப் பட்டியலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. சிலர் தனிப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

மக்கள் ஆதரவு

ஜனாதிபதி விளாடிமிர் புடின், தொலைக்காட்சி உரையில், இந்த தேர்தலை ரஷ்ய படைகளுக்கு மக்கள் ஆதரவு காட்டும் நிகழ்வாக இருக்கும் என கூறினார்.

அவர், “உங்கள் வாக்கு, எங்கள் வீரர்களுக்கு பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டும்” என்று தெரிவித்தார் .

நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு

நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு

இந்த தேர்தல், ரஷ்யாவின் பொருளாதார சவால்களுக்கும், மேற்கத்திய தடைகளுக்கும், எரிபொருள் பற்றாக்குறைகளுக்கும் நடுவே நடைபெறுகிறது.

உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டதாகக் கூறும் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும், கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உக்ரைன் அரசு, இந்த தேர்தலை சட்டவிரோதமானது எனக் கூறி, சர்வதேச சமூகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

முதல் நிலை முடிவுகள் செப்டம்பர் 20 இரவு வெளியாகும் எனவும், முழுமையான முடிவுகள் செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   

கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US