ரஷ்யா, சீனா கூட்டு ராணுவப் பயிற்சி! அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவும் சீனாவும் தங்கள் முதல் ராணுவப் பயிற்சியை நடத்தியதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஜோ பிடன் அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் தலைவர்களை டோக்கியோவில் சந்திக்கிறார்.
இந்நிலையில், வடகிழக்கு ஆசியாவில் ரஷ்யா, சீனா நாடுகள் மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியை அரசாங்கம் கண்காணித்து வருவதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தி நியூயார்க் டைம்ஸ்-யிடம் தெரிவித்தார்.
இரு நாடுகளும் ஜப்பான் கடலுக்கு மேல் போர் விமானங்களை அனுப்பியதாகவும், விமானங்கள் தெற்கு நோக்கி கிழக்கு சீனக் கடலை நோக்கி தொடர்ந்து பறந்ததாககவும் அவர் கூறினார்.
இரண்டு சீன ராணுவ விமானங்களும் நான்கு ரஷ்ய போர் விமானங்களும் அதன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளின் அடையாளமாக இந்த கூட்டு ராணுவப் பயிற்சி தெரிகிறது.
உக்ரைனில் திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் ரஷ்யா! போட்டுடைத்த அமைச்சர்
சீனாவுடனான உறவுகளை வளர்ப்பதில் ரஷ்யா கவனம் செலுத்தும் என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov தெரிவித்திருந்தார்.
உக்ரைனில் நடந்த போருக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள் சர்வாதிகாரி நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், சீனாவுடனான உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்வதே ரஷ்யாவின் இலக்கு என்று Sergei Lavrov கூறினார்.