உக்ரைனில் திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் ரஷ்யா! போட்டுடைத்த அமைச்சர்
ரஷ்யர்கள் தானியங்களைத் திருடி வெளிநாடுகளுக்கு விற்பதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, ரஷ்ய திருடர்கள் உக்ரேனின் தானியங்களை திருடி கப்பல்களில் ஏற்றுகிறார்கள்.
பின்னர் வடமேற்கு துருக்கியில் அமைந்துள்ள போஸ்பரஸ் ஜலசந்தி வழியாக எடுத்துச் சென்று வெளிநாடுகளில் விற்கின்றனர்.
உலக நாடுகள் விழிப்புடன் இருக்குமாறும், திருடப்பட்ட தானியங்களை வாங்க மறுங்கள்.
மேலும், திருடப்பட்டதை வாங்காதீர்கள். ரஷ்ய குற்றங்களுக்கு உடந்தையாக இருக்காதீர்கள் என Dmytro Kuleba வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனின் துறைமுகங்கள் தடுக்கப்பட்டுள்ளதால், உக்ரைனால் வெளிநாடுகளுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை, இதனால் உலகளாவிய உணவு விலைகள் உயரும்.
வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்... டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு முக்கிய அறிக்கை
அதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட ரயில்வே திறன் மற்றும் சிறிய டான்யூப் நதி துறைமுகங்களை நம்பி, நாடு அதன் மேற்கு எல்லையில் ஏற்றுமதிகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.