ரஷ்யா மீது இரவோடு இரவாக தாக்குதல்: சுட்டு வீழ்த்தப்பட்ட 44 உக்ரைனிய டிரோன்கள்
இரவோடு இரவாக உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலை முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்கள்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரவோடு இரவாக ரஷ்ய வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 44 உக்ரைனிய டிரோன்களை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

ப்ரையன்ஸ்க் பிராந்தியத்தில் 43 டிரோன்களும், ரோஸ்டோவ் பிராந்தியத்தில் 1 டிரோன்கள் இடைமறித்து அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இடைமறிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் நாட்டின் உள் கட்டமைப்புகளுக்கோ அல்லது பொது கட்டமைப்புகளுக்கோ எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |