பற்றி எரியும் ரஷ்யா! வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சார கட்டிடத்தில் பயங்கர தீ!
ரஷ்யாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சார கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரத்தில் உள்ள ஒரு கலாச்சார பாரம்பரிய கட்டிடம் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
ட்விட்டர் பயனர் ஒருவர் கட்டிடத்தில் தீப்பிடித்ததைக் காட்டும் வீடியோவை பதிவிட்டு "ரஷ்யாவில் மற்றொரு தீ, இது சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம். காலியான, ஆனால் கலாச்சார பாரம்பரிய கட்டிடத்தில் இந்த தீப்பிடித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து இர்குட்ஸ்க் நகரத்தில் ஒரு திரையரங்கிற்கு பக்கத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய கட்டிடத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியாகியுள்ள வீடியோவில், தீயணைப்பு இயந்திரத்தில் இருந்து கட்டிடத்தின் உச்சிக்கு ஒரு ஏணி எழுவதையும், தீயணைப்புக் குழுவினர் தீப்பிழம்புகளை நோக்கி ஏறுவதையும் காட்டுகிறது, மற்றொரு கிளிப் வரலாற்று இடத்திற்குப் பின்னால் இருக்கும் ஒரு பகுதியில் இருந்து புகை கொட்டுவதைக் காட்டுகிறது.
A historic building is on fire in the center of #Irkutsk, #Russia. pic.twitter.com/41de8OXdEa
— NEXTA (@nexta_tv) May 13, 2022
இர்குட்ஸ்க் சைபீரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும் மற்றும் இர்குட்ஸ்க் பிராந்தியத்தின் மையமாக உள்ளது. இது கிழக்கு சைபீரியா மற்றும் ரஷ்யாவின் வெகுதூர கிழக்கின் நிர்வாக மற்றும் கலாச்சார மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் பயனர் @1917CCCP2 காட்சிகளைப் பகிர்ந்து, "Vampilov Irkutsk Regional Theatre-ல் தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். "கிராஸ்னோர்மெய்ஸ்கயா தெருவில் உள்ள பழைய டியூசா கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ, 3 தொழில்நுட்ப கார்கள் மற்றும் 12 பணியாளர்களால் சமாளிக்கப்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
⚡️The building next to the TYUZ in the center of Irkutsk is burning on an area of 800 square meters, 50 people were evacuated. The fire has already spread to the annex to the TYUZ. It is still difficult to say whether the theater itself is on fire, the Ministry of Emergencies. pic.twitter.com/gE5MJYNbMX
— Flash (@Flash43191300) May 13, 2022
இதுபோல், உக்ரைன் மீதான புடினின் இராணுவம் படையெடுத்துள்ள பிறகு, சமீப நாட்களாக ரஷ்யாவின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கு உரிய வகையில் தீ மற்றும் வெடி விபத்துக்கள் நடந்துவருகிறது.
⚡️This is how the fire in the center of Irkutsk looked like from a bird's eye view. The flame has already been localized, the Ministry of Emergency Situations continues to eliminate the consequences. pic.twitter.com/yO2rCOpWHC
— Flash (@Flash43191300) May 13, 2022
⚡️In the center of Irkutsk, two buildings caught fire, including the Youth Theater. The fire was put out after several hours of extinguishing. The fire area was 1000 square meters. pic.twitter.com/GN3IgtgyaD
— Flash (@Flash43191300) May 13, 2022
Another fire in #Russia, and this one may be suspicious. Authorities have so far not given a reason for this blaze at an empty, but cultural heritage building in #Irkutsk
— Tim White (@TWMCLtd) May 13, 2022
It's next to a theatre in the city#RussiaOnFire #StandWithUkraine pic.twitter.com/MyPjzyd5MN