யூடியூப் சேனல் நடத்திய பாதிரியாரை சிறையில் அடைத்த ரஷ்யா: காரணம் இதுதான்...
யூடியூப் சேனல் நடத்திய பாதிரியார் ஒருவரை ரஷ்யா சிறையில் அடைத்துள்ளது.
யூடியூப் சேனல் நடத்திய பாதிரியார்
ரஷ்யாவிலுள்ள பாரம்பரிய திருச்சபை ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவான சபைதான். என்றாலும், பாதிரியார்களில் சிலர் உக்ரைன் ஊடுருவல் குறித்து விமர்சனங்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், Ioann Kurmoyarov என்னும் பாதிரியார், அவர் ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார், அவர் தனது சேனலில் உக்ரைன் ஊடுருவல் குறித்து விமர்சித்து வந்துள்ளார்.
மூன்று ஆண்டுகள் சிறை
ஆகவே, Ioann கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரஷ்ய ராணுவத்தைக் குறித்து பொய்யான தகவல்களைக் கூறும் பல வீடியோக்களை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட உள்ள Ioann, இரண்டு ஆண்டுகளுக்கு இணையத்தில் இடுகைகள் இட தடையும் விதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், 2022 ஏப்ரலிலேயே Ioannஇன் பாதிரியார் பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |