ஸ்டார்லிங்கை முடக்க ரஷ்யா முயற்சி - உக்ரைன் ட்ரோன்களுக்கு எதிரான புதிய யுத்தம்
உக்ரைனுக்கு ஆதரவாக இயங்கும் ஸ்டார்லிங்கை முடக்க ரஷ்யா முயற்சி செய்துவருகிறது.
உக்ரைன் போரில், ட்ரோன்கள் முக்கிய ஆயுதமாக மாறியுள்ளன. குறிப்பாக, Elon Musk-ன் Starlink செயற்கைக்கோள் இணையத்தை பயன்படுத்தி, உக்ரைன் “mid-strike drones” பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரஷ்ய இலக்குகளை துல்லியமாக தாக்கி வருகிறது.
இதனால் ரஷ்யாவின் எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மையங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக, ரஷ்யா புதிய ஜாமிங் (jamming) அமைப்புகளை நிறுவி, ஸ்டார்லிங்கின் இணைப்பை முடக்க முயற்சி செய்து வருகிறது.
'Volna Kupol Garant' எனப்படும் சக்திவாய்ந்த ஜாமிங் கருவி, சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஸ்டார்லிங்கை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட கருவிகள் கண்டறியப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ட்ரோன் படைகள், இந்த ஜாமிங் கருவிகளை அழிக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. Zaporizhzhia பகுதியில், உக்ரைன் 422-வது ட்ரோன் படை, ரஷ்யாவின் இரண்டு ஜாமிங் அமைப்புகளை வெற்றிகரமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, எரிபொருள் மற்றும் ஆயுதங்களை பொது வாகனங்களில் மறைத்து, சிறிய சாலைகளில் கொண்டு செல்லும் புதிய யுத்த முறைகளையும் பயன்படுத்துகிறது. பால் லொறிகள், தண்ணீர் டேங்கர் லொறிகள் போன்ற வாகனங்களில் எரிபொருள் மறைத்து கொண்டு செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் போர் திறனை கடுமையாக பாதித்தாலும், ரஷ்யா இன்னும் உக்ரைன் நிலப்பரப்பின் ஐந்தில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
ரஷ்யா ஜாமிங் கருவிகளை பெருமளவில் தயாரித்தால், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களை சிரமப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |