புடினுக்கு எதிராக செயல்படுவதே ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவது! ஒரே போடாய் போட்ட அந்நாட்டு சாம்பியன்
ரஷ்யாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவை வெளிநாட்டு உளவாளிகள் பட்டியலில் அவரின் நாடு சேர்த்துள்ள நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவிற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு பொருளாதார தடையையும் விதித்துள்ளன.
இதற்கிடையே ரஷ்யாவின் செயல்பாடுகளை அந்நாட்டை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ், முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து ரஷ்ய நீதித்துறை அமைச்சகம், அவர்களை, ‘வெளிநாட்டு உளவாளிகள்’ என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மற்றும் மனித உரிமைகள் அறக்கட்டளைகள் மூலம் அவர்களுக்கு நிதி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரி டுவிட்டரில், ரஷ்யாவின் நீதித்துறை அமைச்சகம் என்பது புடினின் தலைமையில் முரண்பாடான துறையாக இருக்கிறது. கிழக்கு ஜேர்மனியில் புடின் அவரது நண்பர்களுடன் உளவு வேலை பார்த்துகொண்டிருந்தபோதும், புனித பீட்டர்பெர்க்கில் உள்ள மக்களிடம் இருந்து திருடிக்கொண்டிருந்தபோதும் நான் எனது நாட்டின் பிரதிநிதியாக இருந்தேன்.
புடினுக்கு எதிராக செயல்படுவதே ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகும் என ஒரே போடாக போட்டுள்ளார்.
"Russian Justice Ministry" is an oxymoron under Putin. And I was representing my country back when Putin was still spying on his colleagues in East Germany and stealing from the people in St. Petersburg. Being anti-Putin is, and will always be, pro-Russian. https://t.co/u7jkvv4Eun
— Garry Kasparov (@Kasparov63) May 20, 2022