உக்ரைனின் மின்சாரம், எரிவாயு உள்கட்டமைப்பு மீது பாரிய ஏவுகணை தாக்குதல்! ரஷ்யா மக்களை காயப்படுத்துகிறது என குற்றச்சாட்டு
ரஷ்ய ராணுவம் பாரிய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை உக்ரேனிய மின்சாரம் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் மீது நடத்தியுள்ளது.
எரிவாயு உள்கட்டமைப்பு
உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு மீது ரஷ்ய ராணுவம், வெள்ளிக்கிழமை பாரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் தாக்குதல் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷ்சென்கோ கூறுகையில், "உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்சாரம் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு மீண்டும் பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
எங்களுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு இல்லாமல் விட்டுவிடுவது மற்றும் சாதாரண குடிமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிப்பது என்ற இலக்கை கைவிடாமல், மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகளை, ஷெல் மூலம் தாக்குவதன் மூலம் சாதாரண உக்ரேனியர்களை காயப்படுத்த ரஷ்யா முயற்சிக்கிறது" என்றார்.
கார்கள் தீக்கிரை
கார்கிவில் நடந்த இந்தத் தாக்குதலில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் உட்பட, பொதுமக்கள் நான்கு பேர் காயமடைந்தனர் என மேயர் இஹோர் டெரெகோவ் தெரிவித்தார்.
அதேபோல், நகரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தையும் ரஷ்ய தாக்குதல் தாக்கியதாகவும், கார்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கார்கிங் ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |