24 மணி நேரத்தில் 2,825 வீரர்களை இழந்த ரஷ்யா: மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய உக்ரைன்
Russia last 2,825 soldiers Over 24-Hour Period in Ukraine war: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யா கிட்டத்தட்ட 2,825 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் 2,825 வீரர்களை இழந்த ரஷ்யா
சனிக்கிழமை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,825 வீரர்களை ரஷ்ய படைகள் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
X தளத்தில் இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் பொதுப் பணியாளர் பிரிவு போர்க்கள நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அத்துடன் போர் தொடங்கிய 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை ரஷ்யா சுமார் 16,50,986 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா 2,825 வீரர்களை இழந்து இருப்பதுடன் பல்வேறு தரப்பிலான போர் தளவாடங்களையும் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கிடைத்த தகவலின் படி, 3 டாங்கிகள், 35 கவசப் போர் வாகனங்கள், 42 பீரங்கி அமைப்புகள், 10 வான் பாதுகாப்பு அமைப்புகள், 1350 போர் தாக்குதலுக்கு உரிய ட்ரோன்கள் மற்றும் 10 தரைவழி ரோபோட்டிக் அமைப்புகள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டை பாதுகாப்பு பணியில் பொதுமக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்றும் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.