இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள்
ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை இரவில் உக்ரைனிய நகரங்களை இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உக்ரைனிய அதிகாரிகள் வழங்கிய தகவல்படி, கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மூலம் ரஷ்யா ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலில் உக்ரைனின் குர்ஸ்க், ஓரல், மில்லெரோவோ, பிரிமோர்ஸ்கோ-அக்தார்ஸ்க் போன்ற பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்திய உக்ரைனிய படைகள்
இரவு முழுவதும் நடந்த இந்த வான்வழித் தாக்குதலை சமாளிக்க உக்ரைனிய படைகள் தங்கள் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு படை வழங்கிய தகவல்படி, கிட்டத்தட்ட 167 ரஷ்ய ட்ரோன்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு எதிர் நடவடிக்கைகளையும் மீறி 30 ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் இலக்குகளை அடைந்துள்ளன.
இதனால் 15 வெவ்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைனின் தடுப்பு நடவடிக்கையில் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவுகள், துப்பாக்கிச் சூடு குழுக்கள், மற்றும் சிறப்பு ஆளில்லா தற்காப்பு அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள் |