நேட்டோ பிரதேசத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் மீது ரஷ்ய சரமாரி ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு வீடியோ
நேட்டோ எல்லையில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் லிவிவ் என்ற இடத்தில் ரஷ்ய நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 57 பேர் காயமடைந்துள்ளனர்.
லிவிவ் நகரில் உள்ள Yavoriv ராணுவ தளம் மீது ரஷ்யா 30 ராக்கெட்டுகளை வீசியதாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனியர்கள் மட்டுமின்றி, Yavoriv ராணுவ தளத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் இருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள நேட்டோ நாடுகளால் Yavoriv ராணுவ தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
The consequences of the shelling in #Lviv region. pic.twitter.com/pjbEy1D9dS
— NEXTA (@nexta_tv) March 13, 2022
மேலும், உக்ரைனுக்கு நேட்டோ விநியோககும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படும் பாதைகள் குறிவைக்கப்படும் என்று ரஷ்ய எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.