ஈரானின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா: உளவு பார்ப்பதற்கான திட்டம் என அச்சம்!
- ஈரானின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா
- உக்ரைனை கண்காணிக்க செயற்கைகோள் பயன்படுத்தப்படுவதாக மேற்கத்திய நாடுகள் அச்சம்
கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து ஈரானின் செயற்கைக்கோளை ரஷ்யா செவ்வாயன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
12ம் நூற்றாண்டின் பாரசீக விஞ்ஞானியின் பெயரிடப்பட்ட கயாம் செயற்கைக்கோளை ரஷ்யா, கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து செலுத்தி அதற்கான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் விவசாய உற்பத்தியை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என ஈரான் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனைக் கண்காணிக்க ரஷ்யா இதைப் பயன்படுத்தும் மற்றும் இஸ்ரேலைக் கண்காணிக்க ஈரான் இதனைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.
Roscosmos via AP
இதுத் தொடர்பாக மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்துள்ள கருத்தில், கயாம் செயற்கைக்கோளில் உக்ரைனில் உள்ள இராணுவ இலக்குகளை கண்காணிக்க உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராவை பயன்படுத்தப்போவதாக ரஷ்யா ஈரானிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை கண்காணிக்க ஈரானுக்கு முன்னோடியில்லாத திறனும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் , மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா தனது விண்வெளி ஒத்துழைப்பை முறித்துள்ள நிலையில் வந்துள்ளது.
Getty Images
கூடுதல் செய்திகளுக்கு: கைப்பற்றப்பட்ட 10 பெட்டி ஆதாரங்கள்: சிக்கலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா வெளியேறும் என ரோஸ்கோஸ்மோஸின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட யூரி போரிசோவ் கடந்த மாதம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.