உக்ரைனில் வட கொரிய படைகள்! ஒரே நாளில் 1420 ராணுவ வீரர்களை இழந்த ரஷ்யா
போரில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று இருப்பதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் வட கொரிய படைகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் அனுமதிக்கு பிறகு தீவிரமடைந்துள்ளது.
இருநாட்டு படைகளும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய நிலப்பரப்பிற்குள் வட கொரிய ராணுவ படைகள் பார்க்கப்பட்டதாக CNN தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன், வட கொரியாவின் ராணுவ ஆலோசகர்கள் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மரியுபோல் நகருக்கு வந்தடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
1000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1420 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அத்துடன் 20 டாங்கிகள், 36 ஆயுத கவச வாகனங்கள் மற்றும் 105 ட்ரோன்களை உக்ரைனிய ஆயுத படைகள் அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |