உக்ரைன் படையெடுப்பிற்கான நோக்கத்தை பராமரிக்க ரஷ்யா போராடுகிறது: பிரித்தானிய உளவுத்துறை தகவல்
உக்ரைன் படையெடுப்பிற்கான முக்கிய நோக்கங்களை பராமரிக்க ரஷ்யா போராடி வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது, உக்ரைனிய தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து இருந்தாலும் கிழக்கு பகுதி நகரங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கான முக்கிய நோக்கத்தை பராமரிக்க ரஷ்யா போராடி வருகிறது என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sky News
உக்ரைனை நாஜிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் ரஷ்யா தனது படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் உக்ரைனில் "நாஜிக்கள்" இருக்கிறார்களா என்று வாக்னர் குழுமத்தின் உரிமையாளர் எவ்ஜெனி ப்ரிகோஜின் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை குறிப்பிட்டு ரஷ்யாவின் நோக்கத்தில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 22 April 2023.
— Ministry of Defence ?? (@DefenceHQ) April 22, 2023
Find out more about Defence Intelligence's use of language: https://t.co/QzHiPxY2mx
?? #StandWithUkraine ?? pic.twitter.com/1xGsgMUFTj
அணிவகுப்பு ரத்து
இதற்கிடையில் ரஷ்யாவின் வருடாந்திர இம்மார்டல் ரெஜிமென்ட் அணிவகுப்புகளை ரத்து செய்வதையும் MoD குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அடிப்படையில் அணிவகுப்புகளை ரத்து செய்ததாக ரஷ்யா கூறுகிறது, அதே நேரத்தில் அணிவகுப்புகளுக்கு பின்னால் உள்ள குழுவின் செய்தித் தொடர்பாளர் ஓல்கா பைபுலோவா, பாரம்பரிய வடிவம் நாள் முழுவதும் ஹீரோக்களின் நினைவகத்தை கொண்டாடும் வகையில் விரிவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.