போரில் 90% படை வீரர்களை இழந்த ரஷ்யா: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
உக்ரைனுடனான போர் நடவடிக்கையில் ரஷ்யா தனது 90% படைகளை இழந்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
படைகளை இழந்த ரஷ்யா
உக்ரைன் உடனான போர் தாக்குதலை ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கியது. இதில் ரஷ்யா கிட்டத்தட்ட 3,60,000 ராணுவ வீரர்களை சண்டையிட களமிறக்கியது.
அத்துடன் 3,100 டாங்கிகளையும் உக்ரைனுடனான தாக்குதலுக்கு ரஷ்யா களமிறக்கியது.
Reuters
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், உக்ரைனுடனான போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்யா களமிறக்கிய ராணுவ வீரர்களில் 90% சதவீத வீரர்களை இழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில் உக்ரைன் போரில் கிட்டத்தட்ட 3,15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்கு பின்னுக்குச் சென்ற ரஷ்ய ராணுவம்
உக்ரைன் போரில் வீரர்கள் இழப்பு, கவச வாகனங்கள் மற்றும் போர் ஆயுதங்கள் இழப்பு ரஷ்யாவின் ராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டது என அறிக்கையை குறிப்பிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
Ap
அதே சமயம் வீரர்களின் அதிப்படியான இழப்பு காரணமாகவும், போரை தொடர்ந்து முன்னகர்த்தி செல்ல வேண்டிய கட்டாயத்திலும் தகுதிகள் குறைந்த வீரர்களை படையில் ரஷ்யா சேர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ukraine, Russia, Putin, Zelenskyy, army, soldiers, Russian droops, United state of America, US intelligence report,Ukraine military