பேரழிவை ஏற்படுத்தும் Glide வெடிகுண்டுகளைத் தயாரித்துக் குவிக்கும் ரஷ்யா
இந்த ஆண்டில் மலிவான மற்றும் பேரழிவு தரும் Glide வெடிகுண்டுகளில் 120,000 வரை தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுத உற்பத்தி
அதில் 500 எண்ணிக்கையில், மேம்படுத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் வகை என்றும், அதிக நகரங்கள் மற்றும் கிராமங்களை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் உக்ரைன் உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

2022 பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக படையெடுப்பை தொடங்கியதன் பின்னர் ரஷ்யா தனது ஆயுத உற்பத்தியை பெருமளவில் அதிகரித்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆயுத தொழிற்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், எந்த வகையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்பது தொடர்பான தரவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் உளவுத்துறையின் மூத்த அதிகாரி வெளிப்படுத்தியுள்ள Glide வெடிகுண்டுகள் குறித்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்றே சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் இந்த 120,000 என இலக்கு குறித்தும் அவர் விளக்கமளிக்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 120,000 Glide வெடிகுண்டுகள் என்பது மிகப்பெரிய எண்ணிக்கை என்றே கூறுகின்றனர்.
Glide வெடிகுண்டுகள் டசின் கணக்காண கி.மீ பறந்து இலக்கை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் 200 முதல் 250 கிளைடு குண்டுகளை உக்ரைன் மீது வீசுகின்றன.

கடந்த மாதம் மட்டும் சராசரியாக நாள் ஒன்றிற்கு 170 கிளைடு குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியுள்ளது. உக்ரைன் படைகளால் இந்த கிளைடு குண்டுகளை சுட்டு வீழ்த்த முடியும் என குறிப்பிட்டுள்ள உளவுத்துறை அதிகாரி, ஆனால் இதன் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சேதத்தை
இது எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ள அவர், உக்ரைன் படைகளால் சரியான முறையில் பதிலளிக்க வேண்டிய ஒரு அச்சுறுத்தல் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கிளைடு குண்டுகள் 95 கி.மீ பறந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், விமானப்படையை பயன்படுத்தாமல் முன் நிரை இராணுவம் மீது பேரழிவை ஏற்படுத்த முடியும்.
அவை மிகவும் மலிவானவை மட்டுமல்ல, ஏவுகணைகளுக்கு மாற்றாகவும் பயன்படுத்த முடியும், அத்துடன் பல நூறு கிலோ வெடிப்பொருட்களுடன் ஏவப்படுவதால், எதிரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியும்.

உக்ரைனின் கார்கிவ் மற்றும் கெர்சன் போன்ற முன்னணி நகரங்களைத் தாக்க ரஷ்யா கிளைடு குண்டுகளையே அதிகமாக பயன்படுத்தியுள்ளது.
தற்போது மேம்படுத்தப்பட்ட, 200 கி.மீ வரையில் சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிளைடு குண்டுகளை ரஷ்யா பெருமளவில் தயாரிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், 400 கி,மீ வரையில் சென்று தாக்கக் கூடிய கிளைடு குண்டுகளையும் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைன் நம்புகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |