உக்ரைனுக்கு அடுத்ததாக மற்றொரு நாட்டின் எல்லையில் படைகளைக் குவிக்கும் ரஷ்யா: பரபரப்பாகும் நேட்டோ
உக்ரைனுக்கு அடுத்ததாக மற்றொரு நாட்டின் எல்லையில் புடின் தனது படைகளைக் குவித்துவருவது தெரியவந்துள்ளதால் நேட்டோ அமைப்பில் பரபரப்பு உருவாகியுள்ளது.
மற்றொரு நாட்டின் எல்லையில் ரஷ்யப் படைகள்
ரஷ்யா தனது படைகளை நேட்டோ நாடான பின்லாந்தின் எல்லைக்கருகில் குவித்துள்ளதைக் காட்டும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளன.
ஸ்வீடன் நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில், பின்லாந்து எல்லைக்கு வெறும் 35 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Kamenka என்னுமிடத்தில், 130க்கும் அதிகமான ராணுவ கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
அவற்றில் 2,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் தங்கமுடியும். அவ்வகையில், Kamenka, Petrozavodsk, Severomorsk-2 மற்றும் Olenya ஆகிய நான்கு இடங்களில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதற்கு ஆதாரமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஸ்வீடன் ஊடகம்.
விடயம் என்னவென்றால், பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பில் ரஷ்யா நீண்ட காலமாகவே அந்நாடுகளை மிரட்டிவந்த நிலையில் தற்போது பின்லாந்து எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுவருவதால் அச்சம் உருவாகியுள்ளது.
உக்ரைனை ஊடுருவுவதற்கு முன்பும், புடின் இதேபோலத்தான் எல்லையில் படைகளைக் குவித்தார் என்பதே அச்சத்துக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |