உக்ரைன் மீது மீண்டும் ராக்கெட் மழை..! நாட்டை சுற்றி வளைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா மிகப்பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி இருப்பதாக உக்ரைனிய ராணுவம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவ்வில் குறைந்தது 7 வெடிப்புகள் கேட்க பட்டதாகவும், நாடு முழுவதும் ரஷ்ய வான் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், இந்த உயிரிழப்புகள் மேற்கு Lutsk, கிழக்கு Dnipro மற்றும் தெற்கு Zaporizhzhia பகுதிகளில் பதிவாகியுள்ளது.
ரஷ்யா 11 TU-95 மூலோபாய குண்டுவீச்சுகளை பயன்படுத்தியதாகவும், ஏவுகணைகளை ஏவி இருப்பதாகவும் உக்ரைனிய விமானப்படை தங்கள் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து பல ரஷ்ய ட்ரோன் குழுக்கள் கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய உக்ரைனிய பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலானது நள்ளிரவில் ஆரம்பமாகி தற்போதும் தொடர்ந்து வருவதாக உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |