உக்ரைன் துறைமுக நகரத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! நாசமான கட்டிடம்..மூவர் பலி
தெற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான Kryvyi Rih மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தெற்கு உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 13 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பலி
பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி பிராட்சுக் கூறும்போது, 'கருங்கடலில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ரஷ்யா 4 காலிபர் ஏவுகணைகளை ஏவியது' என்றார். தாக்குதலினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த மூவரும் கிடங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பலமுறை ரஷ்யாவின் படைகளால் போரின் தொடக்கத்தில் இருந்தே ஒடேசா குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
முன்னதாக, ஏவுகணை தாக்குதலில் மூத்த ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |