பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருது! புடின் அறிவிப்பு

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation Money
By Ragavan Aug 16, 2022 04:53 PM GMT
Report

பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற ரஷ்யா தாய்மார்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.

 ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான 'Mother Heroine' விருதை மீண்டும் அறிவித்துள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

ரஷ்யா-உக்ரைன் போரின் போது மோசமடைந்துள்ள மக்கள்தொகை நெருக்கடியை மாஸ்கோ எதிர்கொண்டுள்ள நிலையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Mother Heroine என்பது சோவியத் யூனியனில் ஒரு கெளரவப் பட்டமாகும், இது ஒரு பெரிய குடும்பத்தை தாங்கி வளர்ப்பதற்காக வழங்கப்பட்டது, அதாவது 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு இது பொருந்தும்.

பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருது! புடின் அறிவிப்பு | Russia Mother Heroine Putin Soviet Era Award

ரஷ்ய செய்தி நிறுவனமான TASS, திங்களன்று (ஆகஸ்ட் 15) வெளியிடப்பட்ட சட்டத் தகவல்களின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் வெளியிடப்பட்ட ஒரு ஆணையில், இந்த விருது பெரும் தாய்மார்களுக்கு 1 மில்லியன் ரூபிள் ( கிட்டத்தட்ட இலங்கை ரூ.60 லட்சம்) மொத்தத் தொகையாக கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தைகைப் பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.

மேலும் இந்த ஆணையின்படி, தகுதி பெற்ற தாய்மார்கள் தங்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் விருது கிடைக்கும். போரிலோ, பயங்கரவாதச் செயலிலோ அல்லது ஏதேனும் அவசரச் சூழ்நிலையிலோ ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்.

இதையும் படிங்க: பெண்களுக்கான பீரியட்ஸ் தயாரிப்புகள் முற்றிலும் இலவசம்! சட்டத்தை அமுல்படுத்திய முதல் நாடு 

'Mother Heroine' விருது முதன்முதலில் 1944-ல் முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவிலான மக்கள் தொகையை இழந்தபோது இது அறிவிக்கப்பட்டது. 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன், பட்டம் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டது.

சமீபத்திய தசாப்தங்களில், ரஷ்யாவில் மக்கள்தொகை கிட்டத்தட்ட நிலையான சரிவைக் கண்டது, இது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 400,000 பேர் குறைந்த பின்னர் மொத்த மக்கள் தொகை 145.1 மில்லியனாகக் குறைந்தது.  

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US