உக்ரைனின் 30 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும்: மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 30 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு ரஷ்யா உடன்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த முன்மொழிவை அமெரிக்கா மற்றும் உக்ரைன் இணைந்து முன்வைத்துள்ளன.
வெள்ளிக்கிழமை, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர்களுடன் தன்னுடைய பேச்சுவார்த்தை குறித்து மேக்ரான் தகவல் தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி, தனது தினசரி வீடியோ உரையில், மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடந்ததையும், இதன்மூலம் அமைதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றியும் விவாதித்ததாக கூறினார்.
மேலும், போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"இந்த எல்லா விடயங்களிலும், பிரான்ஸின் முழுமையான ஆதரவு எங்களிடம் இருக்கிறது" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
இந்த 30 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம், ரஷ்யா ஒப்புக்கொண்டால், உக்ரைன் போருக்கு ஒரு தற்காலிக தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |