உக்ரைனுக்கு வழங்கும் ஒவ்வொரு உதவியும்...அனைவருக்கும் பேரழிவை தரும் என ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனுக்கு வழங்கும் ஒவ்வொரு உதவியும் நோட்டோ நாடுகளுடனான ரஷ்யாவின் நேரடி அணு ஆயுதப் போரை தூண்டும் வாய்ப்பை எற்படுத்துவதாக பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது மூன்று மாதங்கள் கடந்தும் முடிவடையாத நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராட அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் தற்போது பல ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனம் தெரிவித்த போதிலும், அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் தொடர்ந்து பல்வேறு மேற்கத்திய ராணுவ ஆயுதங்கள், போர் விமானங்கள், மற்றும் ராணுவ பயிற்சிகள் ஆகிய உதவிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், உக்ரைனுக்கு நோட்டோ நாடுகள் மேற்கத்திய ஆயுதங்களை வழங்குவது, ராணுவங்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்வதன் முலம் நோட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி அணுஆயுதப் போரை தூண்டும் வாய்ப்பை எற்படுத்துவதாக எச்சரித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: காட்டுக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்: தீப்பற்றி எரியும் காட்சிகள்! பயணிகளின் நிலை என்ன?
மேலும் இது அனைவருக்கும் பேரழிவு தரும் காட்சியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
டிமிட்ரி மெட்வெடேவ் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை புடினின் தலைமைக்கு கிழ் ரஷ்ய பிரதமராகவும், புடினின் நெருங்கிய நம்பத்தகுந்த வட்டாரங்களில் முக்கிய நபராகவும் திகழ்பவர் என்பது குறிப்பிடதக்கது.