வெல்ல முடியாத சாத்தான் ஆயுதத்தை உருவாக்கிய ரஷ்யா! எதிரிகளுக்கு புடின் விடுத்த சவால்.. 2 மிரட்டல் வீடியோ
எதிரிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டு ரஷ்யாவுடன் மோதுங்கள் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சர்மாட் (சாத்தான் - 2) என்ற புதிய அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
புடினின் வார்த்தைகளின்படி, இது "வெல்லமுடியாத ஆயுதம்" என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யா தனது ஏவுதளத்திலிருந்து ஏறக்குறைய ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒரே ஏவுகணையில் 10 வார் ஹெட்களை வைக்க முடியும். இதனால் அதிக அளவிலான சேதங்களை இது ஏற்படுத்தும். ரஷ்யா இந்த ஏவுகணையை 2000ம் தொடக்கத்திலேயே உருவாக்கிவிட்டது.
The Ministry of Defense of the #Russian Federation showed new footage of the launch of the Intercontinental ballistic missile "#Sarmat.#Ballistic #Missile #Russia #UkraineRussiaWar pic.twitter.com/8aL972g6tr
— Chaudhary Parvez (@ChaudharyParvez) April 21, 2022
அதன்பின் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி இதை ரஷ்யா தொடர்ந்து அப்டேட் செய்து வந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ஏவுகணை எதிரி நாட்டின் ஆண்டி மிஸைல் ஏவுகணை சிஸ்டத்தை தாண்டி தாக்க கூடியது.
புடின் அளித்த விவரமான பேட்டியில், சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உங்களை வாழ்த்துகிறேன். இந்த ஏவுகணை பூமியில் உள்ள எந்த இலக்கையும் தாக்கும்.
இனி ரஷ்யாவின் எதிரிகள் ஒருமுறைக்கு, 2 முறை ஆலோசித்துவிட்டு எங்களுடன் மோதுங்கள். இந்த உண்மையான தனித்துவமான ஆயுதம் நமது ஆயுதப்படைகளின் போர் திறனை வலுப்படுத்தும். நமது நாட்டின் பாதுகாப்பை பலமாக்கும் என கூறியுள்ளார்.
Russia says it carried out a test-launch of its Sarmat intercontinental ballistic missile, a new addition to its nuclear arsenal. Vladimir Putin congratulated the military on the successful launch. https://t.co/5UtqHrqKW1 pic.twitter.com/ySWNKGiJlC
— ABC News (@ABC) April 20, 2022