இருளில் மூழ்கிய உக்ரைன்! ரஷ்ய தாக்குதலில் துரதிர்ஷ்ட மரணங்கள் - கொந்தளித்த ஜெலென்ஸ்கி
உக்ரைன் மீது ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மின்வெட்டு
ரஷ்யா நடத்திய இரவுநேர தாக்குதலில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லீரல் நோய்க்கு மாத்திரை எடுத்து வந்த கணவருக்கு.., 10 ஆண்டுகளாக HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மனைவி அதிர்ச்சி
மேலும், இந்த தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றிய பகுதியில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "போரை இழுத்தடிக்க ரஷ்யா போதுமான அழுத்தத்தை உணரவில்லை என்பதை நிரூபிக்கும் மற்றொரு இரவு.
தற்போது வரை 17 பேர் காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்" என்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
எரிசக்தி உள்கட்டமைப்பு குறி
எரிசக்தி அமைச்சகம் கூறும்போது, ரஷ்யாவின் தாக்குதல்கள் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் குறிவைத்தன. ஆயிரக்கணக்கானோருக்கு இந்த குளிர் காலத்தில் உக்ரைன் முழுவதும் வெப்பம் மற்றும் மின்சாரம் இல்லாமல் போய்விட்டது என்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆகியோரது சந்திப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையில், ஒரே இரவில் 33 உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்துவிட்டதாக சேதத்தை குறிப்பிடாமல் ரஷ்யா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |