இறுகும் அமெரிக்க நெருக்கடி... இந்தியாவிற்கு மேலும் சலுகை அளிக்க முடிவு செய்த ரஷ்யா
அமெரிக்க வரி நெருக்கடியால் தத்தளிக்கும் இந்தியாவிற்கு எண்ணெய் விலையில் மேலும் சலுகை அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் யூரல்
வெளியான தகவலின் அடிப்படையில், பீப்பாய் ஒன்றிற்கு 3 முதல் 4 டொலர் வரையில் சலுகை அளிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, செப்டம்பர் பிற்பகுதியிலும் அக்டோபர் மாதத்திலும் ஏற்றப்படும் சரக்குகளுக்கு ரஷ்யாவின் யூரல் தரத்தின் விலையில் சலுகை அளிக்க முடிவாகியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக குறிப்பிட்டு, இந்தியாவை தண்டிக்கும் வகையில், கடந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு எதிராக வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியது.
2022ல் உக்ரைன் போர் வெடித்ததன் பின்னர் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதியை இந்தியா முன்னெடுத்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் கடும் விமசர்னங்களுக்கு நடுவே, ரஷ்யா மற்றும் சீனாவிடம் நெருக்கமான உறவை முன்னெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கூட, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவும் இந்தியாவும் ஒரு சிறப்பு உறவைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், சோவியத் ரஷ்யா காலகட்டத்தில் இருந்தே, ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.
இந்தியாவையே நம்பியுள்ளது
இந்த நிலையில் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை தடை விதிக்காத நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை ஒருபோதும் தடை செய்ய முடியாது என்றே இந்தியா பதிலளித்துள்ளது.
அத்துடன், டீசல் இறக்குமதிக்காக உக்ரைன் அரசாங்கமும் பெருமளவில் இந்தியாவையே நம்பியுள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கொள்முதலில் ஒரு சிறிய தோய்வு இருந்தபோதிலும், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன.
மேலும், கடந்த வாரம் ஒரு பீப்பாய்க்கு 2.50 டொலர் தள்ளுபடியில் வழங்கப்பட்டதால், மலிவான யூரல் கச்சா எண்ணெய் வாங்கும் ஆர்வத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது என்றே கூறபப்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |