ரஷ்யா உக்ரைன் மீது வீசிய ஏவுகணை ரஷ்யாவிலேயே விழுந்தது: புடினுக்கு மற்றொரு தலைகுனிவு
ரஷ்யா உக்ரைனை நோக்கி வீசிய ஏவுகணை ஒன்று உக்ரைனிலேயே விழுந்தது.
ஏவுகணை விழுந்ததில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா ஜம்பமடித்துக்கொண்ட ஒரு ஏவுகணை ரஷ்யாவிலேயே விழுந்த விடயம், புடினுக்கு மற்றொரு தலைக்குனிவாக அமைந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என ரஷ்யா பெருமையடித்துக்கொண்ட ஏவுகணை ஒன்று, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் மண்ணைக் கவ்வியது.
Credit: Newsflash
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய திறன்படைத்தது என கருதப்படும் அந்த ஏவுகணை, நேற்றிரவு உக்ரைன் மீது ஏவப்பட்ட நிலையில், அது, தெற்கு ரஷ்யாவிலுள்ள Stavropol Krai என்ற இடத்தில் விழுந்ததில் எட்டு பேர் காயமடைந்தார்கள்.
ஆனால், அது ரஷ்ய ஏவுகணை அல்ல, உக்ரைனுக்குச் சொந்தமான ட்ரோன் என ரஷ்ய தரப்பு மறுப்பு தெரிவித்ததாக உக்ரைன் இராணுவ தெரிவித்துள்ளது.
Credit: Newsflash
Credit: Newsflash
Credit: AP