இரவோடு இரவாக 216 ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல்: உக்ரைனிய விமானப்படை போராட்டம்
உக்ரைன் மீது நேற்றிரவு மிகப்பெரிய இரவு நேர வான்வழித் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல்
வெள்ளிக்கிழமை இரவு உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைன் பல்வேறு பகுதிகளை குறிவைத்து கிட்டத்தட்ட 216 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அடங்கிய அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஷாஹெட்(Shahed), கெர்பெரா(Gerbera), இடல்மாஸ்(Italmas), பாரோடி(Parody) பாண்டரோல்(Banderol) மற்றும் ராக்கெட் மூலம் இயங்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் Kh-59/69 வகை ஏவுகணைகளும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜபோரிஷியா பகுதியில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
உக்ரைனின் தடுப்பு நடவடிக்கை
ரஷ்யா முன்னெடுத்த இந்த வான்வழித் தாக்குதலில் கிட்டத்தட்ட 198 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படைகள் இடைமறித்து செயலிழக்க செய்துள்ளனர்.
இருப்பினும் ட்ரோன் இதிலிருந்து தப்பிய ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் 16 இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் சிதலமடைந்த பாகங்கள் விழுந்ததில் 12 இடங்கள் சேதமடைந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |