பள்ளி மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள்: புடினின் விபரீத திட்டம்
எத்தனை வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, கர்ப்பமுற்றால் அந்தப் பெண்ணுக்கு 1,000 பவுண்டுகள் வழங்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள்
ரஷ்யாவிலுள்ள Oryol என்னும் நகரின் மக்கள்தொகை வெறும் 8,000தான். ஆகவே, மக்கள்தொகையை அதிகரிப்பதற்காக, கர்ப்பமுறும் இளம்பெண்களுக்கு 1,000 பவுண்டுகள் வழங்க அரசு முன்வந்துள்ளது.
ஒரே நிபந்தனை, அந்த பெண், தான் 12 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக நிரூபிக்கவேண்டும், அவ்வளவுதான்!
பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு இந்த திட்டத்தில் இணைய ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த திட்டம் 100,000 ரூபிள்கள், அதாவது, 920 பவுண்டுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு கர்ப்பமுறுவதற்கு குறைந்த பட்ச வயது வரம்பே கிடையாது!
ரஷ்யாவில் பிறப்பு வீதம் குறைந்துவரும் நிலையில், எதிர்காலத்தில் ராணுவத்துக்கு வீரர்கள் தேவை என்பதற்காகவே, பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |