தெரு நாய்களைப் பிடிக்க திட்டமிடும் ரஷ்யா: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ள யோசனை
தெரு நாய்களைப் பிடித்து அவற்றை உக்ரைன் போரில் ஈடுபடுத்த யோசனை தெரிவித்துள்ளார் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
நாய்களைக் கொல்ல சட்டம்
சமீபத்தில், ரஷ்ய நகரமொன்றில் ஒரு கூட்டம் தெரு நாய்கள், ஒரு எட்டு வயது சிறுவனைக் கடித்துக் குதறியதில் அந்த சிறுவன் கொல்லப்பட்டான்.
பல ரஷ்ய நகரங்களில் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. சமீபத்தில் சிறுவன் ஒருவன் நாய்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.
Image: Getty Images
உக்ரைன் போரில் பயன்படுத்த யோசனை
இதற்கிடையில், மூத்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான Fedot Tumusov (67) என்பவர், பெரிய மற்றும் முரட்டு நாய்களை உக்ரைன் போரில் பயன்படுத்தலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.
அந்த நாய்களுக்குப் பயிற்சி அளித்து அவைகளை போர்க்களத்துக்கு அனுப்பலாம் என்று கூறியுள்ள அவர், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கவும், காயம்பட்டவர்களை இழுத்து வரவும் அவைகளைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.