புத்தாண்டில் மிக மோசமான முடிவெடுக்கவிருக்கும் விளாடிமிர் புடின்... எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி
பிறக்கவிருக்கும் புத்தாண்டில் உக்ரைனுக்கு எதிராக மிக மோசமான முடிவொன்றை ரஷ்யா எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அடுத்த நகர்வு
உக்ரைன் விவகாரத்தில் தங்களின் இலக்கை ரஷ்யா கண்டிப்பாக அடையும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள நிலையிலேயே, ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மக்களுக்கான தினசரி காணொளி செய்தி ஒன்றிலேயே ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் அடுத்த நகர்வு குறித்து எச்சரித்துள்ளார். பிறக்கும் புத்தாண்டில் உக்ரைன் மீது மிக மோசமான போரை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உக்ரேனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்யா தனது இலக்குகளை அடையும் என்றும், தங்களுக்கு சொந்தமான உக்ரேனிய பிரதேசங்களை கைப்பற்றுவது உட்பட வலுக்கட்டாயமாக அல்லது பேச்சுவார்த்தையின் ஊடாக ரஷ்யா சாதிக்கும் என்றே புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது அழுத்தம்
ஏற்கனவே டான்பாஸ் பகுதி மொத்தம் ரஷ்யாவிடம் ஒப்படைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரத் தயார் என ரஷ்ய தரப்பு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் நிபந்தனை வைத்துள்ளது.
இதனையடுத்து, அமெரிக்காவும் டான்பாஸ் விவகாரத்தில் உக்ரைன் மீது அழுத்தமளிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், தமது எதிர்காலத் திட்டத்தின் அடிப்படையில், உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேரவிடாமல் ரஷ்யா தடுத்துள்ளது.

அப்படியான திட்டத்தை உக்ரைன் கைவிடுவதாகவும் அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், நேட்டோ அளிக்கும் பாதுகாப்புக்கு ஒப்பான நடவடிக்கைகளை உக்ரைன் மீது ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |